Popular posts from this blog
92 - தண்டத்தின் தபஸ் வலிமை - Mahaperiva by Radhika Vijaykumar
உள்ளமெல்லாம் பொங்குமே "வெண்பொங்கல்"
உள்ளமெல்லாம் பொங்குமே "வெண்பொங்கல்" என்ற ஒரு வார்த்தை கேட்டால் !! இது ஒரு நாக்கின் சரித்திரப் பதிவு. இந்த பதிவின் அருமையை நூடுல்ஸ், பீட்சா, பாஸ்தா என்ற அந்நிய அனாச்சார குழகுழா உணவுகளுக்கு அடிமை பட்ட நாக்குகளால் உணரவே முடியாது. அவர்கள் விலகி நின்று வேடிக்கை பார்க்கவும். "வெண் பொங்கல்" எனது நாடி நரம்புகள் எல்லாம் சிலிர்த்து எழுந்து ஒரு இனிய சுவை அனுபவத்திற்கு என்னை தயார் ஆக்கும் ஒரு வார்த்தை. அரிசி, பயத்தம்பருப்பு, பச்சை மிளகாய், மிளகு, இஞ்சி, ஜீரகம், நெய் இது இருந்தால் யார் வேண்டுமானாலும் பொங்கல் செய்து விடலாம் என்ற நினைப்பு உங்களுக்கு இருந்தால் கையை கட்டிக்கொண்டு ஒரு ஓரமாக நில்லுங்கள். அது பிறவியிலேயே கைமணம் கொண்டவர்களால் மட்டுமே முடியும். ருசியான பொங்கல் செய்வது என்பது தனிமையான இரவின் குளிரில் இளையராஜா பாடலை கண்ணை மூடி கேட்கும் ஒரு சுகானுபவம். அதை மூளை முழுவதும் பொங்கல் ருசியால் நிரம்பி முழுக்கப் பண்பட்டவர்களால் மட்டுமே செய்ய முடியும். ஒரு அருமையான பொங்கலுக்கான அடையாளம் அதனை கரண்டியால் வழித்து போடும்போது கரண்டியில் ஒட்டாமல் தட்டில் விழும்போது உர...
Comments
Post a Comment